Home » நிஜாமுதீன் மர்க்கஸ் தப்லிக் ஜமாஅத் மாநாடு குறித்து மத சாயம் பூசும் வேலையை கைவிட வேண்டும் – இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்!

நிஜாமுதீன் மர்க்கஸ் தப்லிக் ஜமாஅத் மாநாடு குறித்து மத சாயம் பூசும் வேலையை கைவிட வேண்டும் – இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்!

0 comment

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொது செயலாளர் முஹம்மது சித்திக் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

டெல்லி நிஜாமுதீன் மர்க்கஸில் மார்ச் 10 ம்தேதி முதல் தப்லிக் ஜமாஅத் மாநாடு நடைபெற்றது இது வருடம் வருடம் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வு இந்த நிகழ்வில் பல்வேறு பகுதிகளில் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதே போல் மார்ச் மாதத்தில் ஈஷா யோக மையத்தின் சார்பாக பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது அதில் பல நாடுகள் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

மார்ச் மாதத்தில் இந்திய நாட்டின் பிரதமர் அமெரிக்கா அதிபர் கலந்து கொண்ட நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

மார்ச் மாதத்தில் இந்திய பிரதமர் ஊரடங்கு உத்தரவு பிறபித்த அன்று மார்ச் 22 உபி முதலமைச்சர் யோகி கலந்து கொண்ட ராம நவமி கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

ஊரடங்கு உத்தரவு பிறபித்த அன்றே பிரதமர் சொன்ன விசயத்தை தவறாக புரிந்து கொண்ட வட மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் வந்தனர்.

இந்த கூட்டங்கள் அனைத்திலும் மக்கள் ஊரடங்கு மற்றும் கொரோனா குறித்து தெரிந்த பிறகு கூடியது எல்லாம் எந்த ஊடகங்கள் பேசாமல் அரசும் ஊடகங்கள் திட்டமிட்டு நிஜாமுதீன் மர்க்கஸ் இஸ்திமா குறித்து மட்டும் பேசுவது கொரோனா வைத்து மத சாயம் பூச சதி நடக்கிறது என்பதை உறுதி செய்வதாக இருக்கிறது.

தமிழ் நாட்டிலும் பல பேர் வெளிநாட்டில் இருந்து வந்த பிறகு அவர்கள் குறித்தே இதுவரை எந்த உறுதியான கொரோனா மருத்துவ பரிசோதனைகள் வராத போது.டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு இது வரை எந்த நோய் தொற்று உறுதி செய்யப்படாத நேரத்தில் தமிழக முதல்வர் அவர்களும் பேட்டியில் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் இருந்து வந்தவர்கள் மூலமாக கொரோனா பரவ வாய்ப்பு இருக்கிறது என்பது ஒரு குறிப்பிட்ட சமூதாயம் மீது ஊடகங்கள் சொல்லும் பொய்யான கூற்றுக்கு வலு சேர்க்கும் விதத்தில் பேட்டி இருப்பதால் அரசும் உடனடியாக இது குறித்து முழு விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறது.

ஊடகங்கள் உண்மை நிலையை ஆராயாமல் தொடர்ந்து உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடுவது கண்டிக்கதக்கது.

டெல்லி நிஜாமுதீன் மர்க்கஸ் இஸ்திமாவில் கலந்து கொண்டவர்கள் தமிழக முழுவதும் 99 சதவீதம் பேர் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி மருத்துவ பரிசோதனை நடைபெற்று கொண்டு இருக்கும் போது திட்டமிட்டு செய்திகளை பரப்புவதை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter