அதிரை காவல்துறையின் நடவடிக்கைகள் சமீப காலங்களாக பெரிய கேள்விக்குறியாகி வருகிறது.அதிரையில் கடந்த ஒருவருடங்களாக அதிகரித்துவரும் கார் கண்ணாடி உடைப்பு, திருட்டு சம்பவங்கள் என பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன குறைந்தபாடில்லை.இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்த்தாக இதுவரை எந்தவொரு செய்தியும் இல்லை.மேலும் அதிரை ECR சாலையில் உள்ள மூடப்பட்ட மதுக்கடை சட்டவிரோதமாக மறைமுகமாக விற்கின்றனர்.இதனை கண்டித்து பலர் புகார்கள் கொடுத்தும் காவல்துறையினரின் நடவடிக்கையில்லை.
இதுவரை பல அதிகாரிகள் அதிரையில் வசிக்கும் மக்களுடன் ஒரு நெருக்கத்தையே கடைபிடித்து வந்தனர்.எந்தவித சட்டசிக்கல்களும் நிகழாத வண்ணம் அதிரை மக்களும் பலவகையில் காவல்துறைக்கு உதவி செய்தே வருகின்றனர்.மேலும் ஊரில் நடக்கும் விளையாட்டு போட்டிகள் என அனைத்திலும் பங்குகொண்டு சிறப்பித்து இருக்கின்றனர்.
ஆனால் தற்சமயம் அந்த நிலை மாறி இளைஞர்கள் மத்தியில் அதிரை காவல் அதிகாரிகளின் நடுநிலைபோக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது.இடையே இருந்த நெருக்கம் விரிசலாகிறது.
அதிரையில் பணிபுரிந்த பல அதிகாரிகள் இன்றும் அதிரையர்களின் வீடுகளில் நடைபெறும் விசேசங்களுக்கு வருகை தந்தும்,வாழ்த்தியும் செல்கின்றனர்.மேலும் காவல்அதிகாரிகள் பணிபுரிய கூடிய இடங்களில் அதிரையை முன்னுதாரணமாக கூறிய இதுபோன்ற பல சம்பவங்கள் உள்ளன.