தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள CMPலைன் வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட கோரி அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
SISYA மற்றும் SISVAவின் ஆலோசனையின் பெயரில் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அதனின் தலைவர் ஹாஜி.MSM. அபூபக்கர் அவர்களுடைய தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் தஞ்சை,பட்டுகோட்டை பகுதியில் உள்ள பொதுப்பணி துறையினரிடம் மனு கொடுக்கப்பட்டது.
இந்த மனு அளிக்கும் நிகழ்வில் சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு தலைவர்(SISYA) S.அஹமது அனஸ் ,SISYAவின் செயலாளர் முஹமது சலீம், SISYAவின் துணை தலைவர் மரைக்கா K. இத்ரிஸ் அஹமது,SISYAவின் பொருளாளர் A. சேக் அலி மற்றும் SISYAவின் உறுப்பினர் முன்னாள் கவுன்சிலர் S.முஹமது இப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.