232
கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை அவசியம் கடைப்பிடிக்க மருத்துவர்கள்,சுகாதார துறையினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இதனால் அத்தியவசிய அங்காடிகள் முதற்கொண்டு வங்கிகள் அரசு அலுவலகங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வங்கிக்குள் ஒருவர் பின் ஒருவராக அனுமதிக்க படுகின்றனர்.
இந்நிலையில் வங்கி வாசலில் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
தற்போது நகரில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் நிழலை தேடி குழுமி வருகிறார்கள்.
இதனால் சமூக இடைவெளி என்பது கேள்வி குறியாகிறது.
எனவே வங்கி நிர்வாகம் வாடிக்கையாளர்கள் நலன் கருதி நிழற் பந்தல் அமைத்து கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.