49
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாட்டுபடகு மீனவர்களுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் மீன்பிடி தொழிலுக்கு அனுமதி.
தஞ்சாவூர் மாவட்டம் இரண்டு வட்டங்களாக பிரித்து பட்டுக்கோட்டை, பேராவூரணி என பிரித்து மூன்று நாட்கள் வீதம் நாளை(ஏப் 16) முதல் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கி இருக்கிறது மீன்வளத்துறை.
மீன்பிடித்து விட்டு ஏலம் விடுதல் கூடாது,சமூக இடைவெளிகளை பின்பற்ற வேண்டும்,கையுறை போன்றவை அமைத்து அடிக்கடி கை கழுவுதல் போன்ற கட்டுப்பாடுகளை மீனவர்களுக்கு விதித்தும் இவற்றையெல்லாம் மீன்வளத்துறை,காவல்துறை,வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை இணைந்து இவற்றையெல்லாம் கண்காணிக்கும் என்றும் இந்த கட்டுப்பாடுகளை மீறும் மீனவ கிராமாத்திற்கு அனுமதி ரத்து செய்யப்படும் போன்ற விதிமுறைகளை விதித்து இருக்கிறது.