Home » கும்பகோணம் டூ கிருஷ்ணாஜிபட்டினம் – ஊரடங்கால் 120 கிமீ நடந்தே சென்ற தொழிலாளி !

கும்பகோணம் டூ கிருஷ்ணாஜிபட்டினம் – ஊரடங்கால் 120 கிமீ நடந்தே சென்ற தொழிலாளி !

0 comment

புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினத்தைச் சேர்ந்தவர் R.அப்துல் மஜீத். இவர் கும்பகோணத்தில் ஒரு இடத்தில் சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் 144 ஊரடங்கு உத்தரவால் சிக்கி தவித்த R.அப்துல் மஜீத் என்பவர் தனது சொந்த ஊரான கிருஷ்ணாஜிப்பட்டினம் செல்ல முடிவு எடுத்துள்ளார். ஆனால் பொது போக்குவரத்து இல்லாத காரணத்தினாலும் அவரை அங்கிருந்து மீட்டு வர அவர் வீட்டிலும் போதிய வசதிகள் இல்லாத காரணத்தினாலும் அவர் அங்கிருந்து நடை பயணமாக சொந்த ஊர் செல்ல முடிவெடுத்துள்ளார்.

அதன்படி 120 கிலோமீட்டர் தூரத்தை சுமார் 40 மணிநேரம் நடந்தே பயணித்து அவரது சொந்த ஊரான கிருஷ்ணாஜிபட்டினத்தை வந்து சேர்ந்துள்ளார்.

இது போன்று சிக்கி தவிக்கும் மக்களை தங்கள் ஊர்களுக்கு செல்ல அரசு போதிய ஏற்பாடு செய்து கொடுத்தால் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கலாம்.

You Might Be Interested In

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter