33
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியான அதிராம்பட்டினம் தரகர் தெரு ஜரினா குறித்த காணொளி வைரலாக பரவியதை அடுத்து பலரும் தங்களால் ஆன பொருளாதார உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜரினாவிற்கு அதிக வலி ஏற்பட்டு அவதிப்படும் நிலையில் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்த முடிவெடுத்து முதற்கட்டமாக MRIஸ்கேன் மற்றும் நரம்பியல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இன்று காலை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
முதற்கட்டமாக தமுமுகவின் சார்பில் ₹10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.
மருத்துவரின் பரிந்துரைக்கு பின்னர் மேல்சிக்கிச்சை நடவடிக்கை எடுக்க உள்ளதாக இப்பெண்ற்காக நியமிக்கப்பட்ட மருத்துவ குழு தெரிவித்துள்ளது.