Home » டெங்குவை கட்டுப்படுத்தும் பணியில் செந்தல்லைப்பட்டிணம் பொதுநலசங்கம்(வீடியோ இணைப்பு)!!!!

டெங்குவை கட்டுப்படுத்தும் பணியில் செந்தல்லைப்பட்டிணம் பொதுநலசங்கம்(வீடியோ இணைப்பு)!!!!

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தை அடுத்த செந்தலைப்பட்டினத்தில்,
செந்தலைப்பட்டினம் பொதுநல சங்கம் சார்பாக பல சமூக சேவைகளை செய்வது வருகின்றனர். ஆம்புலன்ஸ் சேவை, ஜனாஸா குளிர்சாதனப் பெட்டி, மருத்துவ சேவைகள், அதன் தொடர்ச்சியாக செந்தலை மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் டெங்கு பரவலாக இருப்பதால் சங்கத்தின் சார்பாக டெங்கு கொசு மருந்து அடிக்கும் கருவி வாங்குவதாக முடிவெடுத்து இருந்தனர்.

அதன்படி செந்தலைப்பட்டினம் பொதுநல சங்கத்தின் சார்பாக நேற்றைய தினம்(29.10.2017) ஞாயிற்றுக் கிழமை மெஷின் வாங்கப்பட்டு செந்தலைப்பட்டினம் கடைத்தெரு மற்றும் தெருக்களின் பல பகுதிகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

குறிப்பு: பொதுநல சங்கத்தை தொடர்புகொண்டு பக்கத்து ஊர்களில் இருக்கும் சகோதரர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்

தகவல்–R. முகமது அப்துல்லா (சவூதி)

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter