Home » கொரோனாவை காரணம் காட்டி அதிரை முன்னாள் சேர்மன் வீட்டு கேஸ் புக்கிங்கை கேன்சல் செய்த டிரைவர்…!

கொரோனாவை காரணம் காட்டி அதிரை முன்னாள் சேர்மன் வீட்டு கேஸ் புக்கிங்கை கேன்சல் செய்த டிரைவர்…!

by admin
0 comment

அதிரையில் கொரோனாவை காரணம் காட்டி முன்னாள் சேர்மன் அஸ்லம் வீட்டு கேஸ் புக்கிங்கை,கம்பெனி டிரைவரே கேன்சல் செய்தது அம்பலம்.

அதிராம்பட்டினம் பேரூராட்சியின் முன்னாள் சேர்மனாக இருந்தவர் அஸ்லம்,இவர் 4 நாட்களுக்கு முன்னர் கொள்ளுக்காடு இன்டேன் கேஸ் ஏஜென்சியில் கேஸ் புக்கிங் செய்திருக்கிறார்,இந்நிலையில் நேற்று ஆபிஸில் இருந்து தொடர்பு கொண்டு அஸ்லமிடம் நீங்கள் புக்கிங்கை கேன்சல் செய்துவிட்டிர்களா என்று வினவி இருக்கிறார், இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் நான் எந்த கேன்சலும் செய்யவில்லை,கேஸ் வரும் என்று தான் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன் என்று பதில் பேசி இருக்கிறார், நீங்கள் கேன்சல் செய்துவிட்டதாக டிரைவர் எழுதி கொடுத்திருக்கிறார் என்றவுடன்,டிரைவர் தொலைபேசி எண் வாங்கி பேசுகையில் அவர் அதிராம்பட்டினம் முத்தமாளை சேர்ந்த பாஸ்கர் என்று தெரியவந்தது, அவர் நம்மிடம் கூறியது கொரோனாவை தொற்றிக்கொண்டு என்னால் போகமுடியாது என்கிற அளவிற்கு பதில் பேசி இருக்கிறார்,இந்த சம்பவம் குறித்து சட்டபடியான நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்திருப்பதாக பேரூராட்சி முன்னாள் தலைவர் அஸ்லம் நம்மிடம் தெரிவித்தார்.

மருத்துவமனைகள்,பொது நிறுவனங்கள் என பலரும் அவசர கால சிகிச்சை,தேவைகளை கொரோனாவை முஸ்லீம்களோடு தொடர்புபடுத்தி புறக்கணித்து வருவது அதிகரித்து வருகிறது.கொரோனா பாதித்த மருத்துவர் உடல் அடக்கம் செய்ய மறுத்த காட்சிகள் என வருத்தம் தரக்கூடிய சம்பவங்கள் அரங்கேறி வருகிறன.


You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter