Home » தர்ம சீலர்கள் யார்!!!

தர்ம சீலர்கள் யார்!!!

by admin
0 comment

தர்மம் என்று சொன்னவுடன் உடனடியாக மக்கள் நினைவில் வருவது பணக்காரர்களை தான்
காரணம் ஏழைகளை கை நீட்டுவோராகவும் பணக்காரர்களை வாரி வழங்கும் கடமை உள்ளோர்களாகவும் பார்க்கும் மனப்போக்கே இதற்க்கு அடிப்படை காரணம் ஆகும்

அதனால் தான் வாடிக்கையாகவே மக்களிடம் கையேந்தும் பிச்சைக்காரர்கள் எப்போதுமே பிச்சை எடுப்போராகவே உள்ளனர்

இஸ்லாத்தில் தர்மம் கொடுப்பதை சிறப்பாக சொல்லப்பட்டுள்ளதே தவிர எப்போதும் பிறர்களிடம் தர்மம் வாங்குவதை சிறப்பித்து சொல்லப் படவில்லை

அவ்வாறு காரணமின்றி கையேந்தி கொண்டே இருப்பதினால் தான் வழக்கமாக தர்மம் வாங்கும் நபர்கள் வாழ்நாள் முழுவதும் இறையருள் இன்றி  பிச்சைக்காரர்களாகவே வலம் வருகின்றனர்

அவர்களின் உடையிலும் நடவடிக்கைகளிலும் பரகத் எனும் அருள் இல்லாத சூழலியே வாழும் காட்சியை பரவலாக  பார்க்கின்றோம்

 

இஸ்லாத்தை பொறுத்தவரை மனிதன் என்ற நிலையில் இருக்கும் அனைவருமே தர்மசீலர்களாக இருப்பதையே விரும்புகிறது

இறை திருப்தியை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு மனிதன் கோடியை வாரி வழங்கினாலும் சரி அல்லது தன்னால் இயன்ற பத்து ரூபாயை வழங்கினாலும் சரி அவரும் இஸ்லாமிய பார்வையில் தர்மசீலரே

உதவி செய்வோர் என்ற அடை மொழியை அதாவது அன்சாரி எனும் பெயரையே  இறைவன் மூலம் பாராட்டப்படும் விதமாக பெயர்  சூட்டப்பட்ட நபித்தோழர்கள் அனைவரும் வசதியானவர்களா என்றால் நிச்சயமாக இல்லை

அவர்களில் கூட தான தர்மங்களை வாங்கும் அளவு தகுதி பெற்ற ஏழ்மை சஹாபாக்கள் அதிகமாக  இருக்கவே செய்தனர்

அப்படியானால் அவர்களையும் தர்ம சீலர்கள் என்று இறைவன் பாராட்ட காரணம் என்ன ?

தனக்கு தேவையிருந்தும் கூட பிறர்களின் சிரமங்களை தங்களது சிரமங்களாக நினைத்து தங்களிடம் இருந்த அத்யாவசிய பொருள்களை கூட கேட்டு வரும் ஏழைகளுக்கு வாரி வழங்கினார்கள்

தங்களிடம் அறவே பொருள் இல்லாத நேரத்திலும் தர்மம் செய்வதற்காகவே  கூலி வேலைக்கு சென்று அதன் மூலம் பெற்ற வருவாயை தர்மம் செய்தவர்கள்  சஹாபாக்கள்

இந்தளவிற்க்கு தர்மம் செய்ய வழி இல்லாதவர்களுக்கும் கூட தர்மத்தின் நன்மைகளை பெற மாற்று வழிகளை சொல்லி தருகின்றது இஸ்லாம்

عَنْ اَبِيْ ذَرٍّ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: تَبَسُّمُكَ فِيْ وَجْهِ اَخِيْكَ لَكَ صَدَقَةٌ، وَاَمْرُكَ بِالْمَعْرُوْفِ وَنَهْيُكَ عَنِ الْمُنْكَرِ صَدَقَةٌ، وَاِرْشَادُكَ الرَّجُلَ فِيْ اَرْضِ الضَّلاَلِ لَكَ صَدَقَةٌ، وَبَصَرُكَ لِلرَّجُلِ الرَّدِيْءِ الْبَصَرِ لَكَ صَدَقَةٌ، وَاِمَاطَتُكَ الْحَجَرَ وَالشَّوْكَ وَالْعَظْمَ عَنِ الطَّرِيْقِ لَكَ صَدَقَةٌ، وَاِفْرَاغُكَ مِنْ دَلْوِكَ فِيْ دَلْوِ اَخِيْكَ لَكَ صَدَقَةٌ

உங்களுடைய (முஸ்லிமான) சகோதரரைப் பார்த்து நீங்கள் புன்னகை புரிவது தர்மம்

நீங்கள் நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது தர்மம்

வழியை தவறியவருக்கு வழிகாட்டுவது தர்மம்

பார்வையற்றோருக்கு வழிகாட்டுவது தர்மம்; கல், முள், எலும்பு போன்றவைகளை நடை பாதையிலிருந்து அகற்றுவது தர்மம்

உங்கள் வாலியிலிருந்து உங்கள் சகோதரருடைய வாலியில் தண்ணீர் நிரப்புவது தர்மம்

என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல்  திர்மிதி

عَنْ اَبِيْ مُوْسَي اْلاَشْعَرِيِّ ؓ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: عَلَي كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ، قَالُوْا: فَاِنْ لَمْ يَجِدْ؟ قَالَ: فَيَعْمَلُ بِيَدَيْهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ، قَالُوْا: فَاِنْ لَمْ يَسْتَطِعْ اَوْ لَمْ يَفْعَلْ؟ قَالَ: فَيُعِيْنُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوْفِ، قَالُوْا: فَاِنْ لَمْ يَفْعَلْ؟ قَالَ: فَلْيَاْمُرْ بِالْخَيْرِ اَوْ قَالَ: بِالْمَعْرُوْفِ، قَالَ: فَاِنْ لَمْ يَفْعَلْ؟ قَالَ: فَلْيُمْسِكْ عَنِ الشَّرِّ فَاِنَّهُ لَهُ صَدَقَةٌ

முஸ்லிம்களில் ஒவ்வொருவரும் தர்மம் செய்வது அவசியம்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது அவரிடத்தில் தர்மம் செய்ய எதுமில்லையென்றால் என்ன செய்வது?” என மக்கள் கேட்டார்கள்

அத்தகையவர் தமது கரங்களால் உழைத்துத் தானும் பலனடைந்து தர்மமும் செய்யவும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்  இதுவும்  அவருக்கு இயலவில்லை யென்றால்”, அல்லது (செய்ய முடிந்தும்) செய்ய வில்லையென்றால்? என மக்கள் கேட்டார்கள்

துன்பத்தில் சிக்குண்ட தேவையுடையோருக்கு உதவி செய்யவும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

இதுவும் செய்யவில்லையென்றால்?” என மக்கள் கேட்டார்கள்

எவருக்கேனும் நல்லதை ஏவவும்” என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்
இதுவும் செய்யவில்லை யென்றால் என்று மக்கள் கேட்க குறைந்த பட்சம் பிறருக்கு சிரமம் கொடுக்காமலாவது இருக்கட்டும், ஏனேனில், பிறருக்கு சிரமம் கொடுக்காமல் இருப்பதும் அவருக்கு தர்மம் தான் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
என்ற ஹதீஸை ஹஜ்ரத் அபூமூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல்  புகாரி

J . யாஸீன் இம்தாதி — இமாம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் வேர்கிளம்பி குமரிமாவட்டம்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter