அதிரை மக்களின் மறக்க முடியாத பெயர்களில் ஒன்று தான் அதிரை எக்ஸ்பிரஸ். அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை, எந்தவித பரபரப்பின்றி, அவசரமின்றி நிதாணமாக உண்மை தன்மையுடன் கடந்த பத்தாண்டுகளாக பதிந்து வருகிறோம் என்பதை தாங்கள் நன்றாகவே அறிவீர்கள்.
ஒவ்வொரு முறையும் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்திற்கேற்ப அதிரை எக்ஸ்பிரஸ் பரிணாம வளர்ச்சி கண்டுவருகிறது.
அதனடிப்படையில் Luffa Labs குழுவினர் உருவாக்கிய அதிரை எக்ஸ்பிரஸ் செயலி(APP) இன்று இரவு வெளியிடப்பட இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தங்களுடைய ஆதரவையும் ஆலோசனைகளையும் தொடர்ந்து தாருங்கள் அந்த உத்வேகத்துடன் சேவையாற்ற காத்திருக்கிறோம்.