தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் போராட்டத்தை வருகிற மே 7ஆம் தேதி அறிவித்து இருக்கிறது.
இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,கொரோனா ஊரடங்கின் காரணமாக மாற்றுத்திறனாளிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர், அவர்களின் குடும்பத்தினர் பசி,பட்டினியாலும் மருந்து, மாத்திரைகளும்,அவசர தேவைகளுக்கும் வருமானம் இன்றி பல லட்சக்கணக்கான மாற்றித்திறனாளிகள் கஷ்டப்படுகின்றனர்.
முதலமைச்சர்,அதிகாரிகள் மத்தியில் மாற்றுத்திறனாளிகளின் துயரங்களை எடுத்துக்கூறியும் மனுக்களை வாயிலாக அனுப்பிய போதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை, சில ஊடகத்தில் மாற்றுத்திறனாளிகள் கஷ்ட்டபடும் நிகழ்வுகளையும்,துயரங்கள் குறித்து வெளிவந்த போதும் அரசு கண்டுக்கொள்ளவில்லை.ஹெல்ப்லைன் மூலம் பல லட்ச மக்களுக்கு உதவியதாக பொய் பிரச்சாரம் செய்வது கண்டிக்கத்தக்கது.
சாதரண காலங்களில் உதவித்தொகை கிடைப்பது போல் சிறுசிறு பொருட்களை தாண்டி கொரோனா துயர் துடைக்க எந்த நிவராணமும் அறிவிக்கவில்லை.கடந்த ஒன்றரை மாதங்களாக பல்வேறு துயரங்களை அனுபவித்து வரும் மாற்றுத்திறனாளிகள் உயிர் வாழ முடியாது என்றெல்லாம் கூறி அழுது புலம்புகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க வலியுறுத்தியும்,அரசின் கடமையை உணர்த்தவும் வருகிற மே 7ல் அரசு அலுவலகம் முன் போராட்டங்களை சமூக இடைவெளியை பின்பற்றி நடத்திட வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.