45
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள அத்திவெட்டி மறவக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவர் வாடியக்காட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த ஏப்ரல் மாதம் வட்டாகுடி என்னும் பகுதியில் ட்ரான்ஸ்ஃபார்மர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருக்கும்போது மின்சாரம் தாக்கியதில் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டது. இதனால் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 22 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மின்சார ஊழியர் பூமிநாதன் நேற்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.