கொரோனா காரணமாக கடந்த 40 நாட்களாக ஊரடங்கை மத்திய,மாநில அரசுகள் அறிவித்து இருந்தன.இதில் சில தளர்வுகளை மாநிலம் முழுவதும் தமிழக அரசு அறிவித்து செய்தி வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் அதிராம்பட்டினம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்பதால் இங்கு எந்தவித தளர்வுகளும் இன்றி மே 17 வரை அரசு அறிவித்த படி 144 ஊரடங்கு தடை உத்தரவு தொடரும் என்றும் அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் 1 மணி வரை மட்டுமே செயல்படவேண்டும்,இதற்கு வணிக வியாபாரிகளும்,பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்,மேலும் உத்தரவுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.