கொரோனா என்னும் கொடூர தொற்றால் அரசு உத்தரவுக்கு இணங்க பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். ஊரடங்கு உத்தரவினால் வியாபாரங்கள் பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கை பயன்படுத்தி பூட்டப்பட்ட கடைகளை குறிவைத்து கொள்ளையர்கள் களம் இறங்கி உள்ளனர்.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் பகுதியில் உள்ள மார்கெட் லைன் பெரிய பள்ளிவாசல் அருகில் முத்து முஹம்மத் என்பவர் மாடர்ன் ஸ்நாக்ஸ் என்னும் பெயரில் கடை வைத்து தொழில் செய்து வந்தார். இவர் அரசு உத்தரவுக்கு இணங்க தினமும் கடை திறந்து பகல் 1 மணிக்கு அடைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று புதன்கிழமை விடியற்காலை 4 மணி அளவில் அவ்வழியில் வந்த முகமூடி அணிந்திருந்த கொள்ளையன் ஒருவன், கடையில் உள்ள கேமராவை தன் முகம் தெரியாமல் இருக்க திசை திருப்பி வைத்து பூட்டை உடைக்க முடற்சித்துள்ளான். ஆனால் பூட்டை உடைக்க முடியாததால் அதனை கைவிட்டு சென்றுவிட்டான். இந்த சம்பவம் கடையின் முகப்பில் உள்ள CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிரையில் உள்ள செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கை பயன்படுத்தி கொள்ளையர்கள், திருட்டு முயற்சியில் ஈடுபடுவதால், இரவு நேர ரோந்துபணிகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீடியோ ;-