தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் கிராம மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் ஊராட்சி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் ஊராட்சி மன்றத் தலைவர் மேனகா ஆனந்த் குமார் அவர்கள் தனது சொந்த செலவில் கிராம மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறி பைகள் வழங்கினார்
நிவாரண பொருட்களை பட்டுக்கோட்டை யூனியன் சேர்மன் பழனிவேல் மற்றும் யூனியன் ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்கள். இதில் பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடித்து நிவாரண பொருட்களை வாங்கிச் சென்றனர்.