கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம் அதிரை காவல் நிலையம் எதிரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சுகாதார துறை அதிகாரிகள், பங்கேற்று அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர். அப்போது கொரோனாவை கண்டு யாரும் அஞ்ச வேண்டாம் என்று அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் தற்போது ரமலானில் காலை வேளையில் பெரும்பாலும் மக்கள் உறக்கத்தில் இருப்பார்கள் என்பதால் சுகாதார பணிக்கு செல்லும் ஊழியர்கள் பொறுமையாக கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக அதிரையில் சுகாதார பணிக்கு உறுதுணையாக இருக்கும் தன்னார்வளர்களுக்காக Z.முகம்மது தம்பிக்கு வட்டார மருத்துவ அதிகாரி ரஞ்சித், சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.


