சீனாவில் சவலைப்பிள்ளையாய் பிறந்து இத்தாலியில் அதிதீவிரமாக காலூன்றி தற்போது இந்தியாவில் குடிகொண்டிருக்கும் கொரோனா எனும் கொடிய வைரஸ் உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.
இந்த கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய அரசும், தமிழக அரசும் ஒன்றினைந்து பொதுமக்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு 2 மாதங்களை நெருங்கி வரும் வேளையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததையடுத்து பொதுமக்கள் பெரும் கொதிப்படைந்தனர்.
இந்நிலையில் மதுக்கடைகள் திறக்க அனுமதியளித்த தமிழக அரசை கண்டித்து தமுமுகவினர் முகநூலில் மூடு டாஸ்மாக்கை மூடு என்று ஹேஷ்டேக் போட்டு கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதானல் முகநூல் முழுவதும் தமுமுகவினரின் மூடு டாஸ்மாக்கை மூடு என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.



