64
மல்லிப்பட்டிணம் முகைதீன் ஜூம்ஆ பள்ளியில் சமூக இடைவெளியை பின்பற்றி இன்று(மே.9) நிர்வாக ஆலோசனை கூட்டம் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தற்போது உள்ள சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. கொரோனா தொற்றின் பரவலையடுத்து, ரமலான் பெருநாளையொட்டி புத்தாடைகள்,பொருட்கள் வாங்க ஆண்கள் மற்றும் பெண்கள் வெளியே செல்வதை தவிர்த்திட வேண்டும்,செல்வதால் பலவித பாதிப்புகள் ஏற்படக்கூடும் ஆதலால் தவிர்த்து கொள்ளுங்கள் என்று மல்லிப்பட்டிணம் பொதுமக்களை ஜமாஅத் நிர்வாகிகள் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.
மேலும் முன் எவ்வாறு அரசுக்கு ஒத்துழைப்பை பொதுமக்கள் வழங்கினீர்களோ அதேப்போல் தொடர்ந்து அரசுக்கு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் என்று வேண்டுகோளை விடுத்தனர்.