Home » துன்பங்களைச் சந்தித்த இளைஞனும், நம்பிக்கை கொடுத்த முதியவரும்!

துன்பங்களைச் சந்தித்த இளைஞனும், நம்பிக்கை கொடுத்த முதியவரும்!

by
0 comment

நான் கற்ற வாழ்க்கை பாடம்..

உலகில் வாழும் அனைவருக்கும் துரோகம், ஏமாற்றம், தோல்வி, அவமானங்கள் என அனைத்தும் இருக்கும். அவ்வாறு பலவற்றையும் சந்தித்த நபரை பற்றி நாம் இங்கு பார்க்க போகிறோம்.

ஒரு மனிதன் இருந்தான். அவன் சிறு வயதில் இருந்தே பிறரிடம் அன்பு காண்பிக்க கூடியவன். அவன் அன்பு காண்பித்த அனைவரும் அவனை வெறுத்தார்கள். அவன் அதை பொருட்படுத்தாமல் மீண்டும் அனைவரிடமும் அன்பு காட்டினான். ஆனால் அவனுக்கு மிஞ்சியது ஏமாற்றமே. சிறு வயது கடந்து இளமை பருவத்திலும் அவனுக்கு துரோகம், தோல்வி, அவமானம், ஏமாற்றம போன்ற அனைத்தும் அவனை துரத்திக்கொண்டே இருந்தது. அப்போது அவனுக்கு ஒரு யோசனை வந்தது. நமக்கு மட்டும் தான் வருகிறதா ? இல்லை மனிதர்கள் அனைவருக்கும் மேற்கண்டவை வருகிறதா ? என்று தனக்குள் கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தான். அப்போது அவன் அருகே வந்த முதியவர் ஒருவர், அவனிடம் பேச்சு கொடுத்து, அவனை அரவணைத்தார். அவனை அரவணைத்த முதியவரிடம் மனம் திறந்து தான் கடந்து வந்த சிரமங்களை கூறினான். அதற்கு அந்த முதியவர், மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அதனை கடக்க வேண்டும். அதுதான் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பதை நமக்கு கற்றுத்தரும் என்று ஆறுதல் கூறியவாறே கடந்து சென்றார் அந்த முதியவர். அந்த இளைஞனும் முதியவரின் பேச்சை கேட்டு, தனது மனதை தைரியப்படுத்திக்கொண்டு வாழ ஆரம்பித்தான்.

நம்பிக்கை தரும் வார்த்தைகள் :

வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் பயப்படாதீர்கள். பயம் தான் வாழ்க்கையில் உங்களின் முதல் எதிரி. எந்த நேரத்திலும் உங்களை யாருடனும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். எந்த செயல் செய்யும் போதும் அதனை நிதானமாக செய்யுங்கள். கவனத்தை கையாளுங்கள். அதைவிட முக்கியமானது நீங்கள் உங்களை எந்த இடத்திலும் விட்டு கொடுக்கக்கூடாது. உங்களை நீங்கள் நம்புங்கள். தோல்வியோ, வெற்றியோ கடைசி நிமிடம் வரை முயற்சி செய்து கொண்டே இருங்கள்.

ஒரு பந்தயத்தில் பங்குபெற்றவர்கள், அவர்கள் தோல்வியுற்றவராக இருக்கட்டும், அல்லது வெற்றி பெற்றவராக இருக்கட்டும், அவர்கள் இருவருக்குமே வரலாற்றில் இடம் உண்டு. ஆனால் அதனை குறை கூறுபவருக்கும் வேடிக்கை பார்ப்பவர்க்கும் வரலாற்றில் இடமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பந்தயத்தில் பங்கேற்க கூடியவரைப்போல் உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டீரகளேயானால், வரலாற்றில் நிச்சயம் உங்களுக்கு இடம் உண்டு.

ஆக்கம் : ஆசிம் கான் ( AX கிருஷ்ணாஜிப்பட்டினம் நிருபர்)

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter