தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் கடற்கரை தெரு 8 மற்றும் 9வது வார்டுகளில் உள்ள கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து இருப்பதால் சுகாதர சீர்கேடு மற்றும் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனால் கால்வாய்களை தற்காலிக சீரமைப்பில்லாமல் நிரந்தரமாக சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மனுவாக எழுதி இன்று (16.11.2017) காலை பேரூராட்சி நிர்வாகத்திடம் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தினர் அளித்தனர்.இளைஞர்களிடம் பேரூராட்சி நிர்வாகம் செய்து தருவதாக கூறியதாக கூறினார்கள்.இந்த சாலையை தான் மதரஷா, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது