13
பட்டுக்கோட்டை சரக புதிய டிஎஸ்பி-யாக புகழேந்தி கணேஷ் இன்று திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி புகழேந்தி கணேஷுக்கு பட்டுக்கோட்டை சரக காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து குற்ற நடவடிக்கைகள் குறைப்பது குறித்து போலீசாருடன் புதிய டிஎஸ்பி ஆலோசனை நடத்தினார். பட்டுக்கோட்டை சரக டிஎஸ்பி-யாக பொறுப்பேற்றுள்ள புகழேந்தி கணேஷ், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் இருந்து மாறுதலாகி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.