52
தமிழக வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு பத்திரம் பதிவு செய்ய வருபவர்கள், பத்திரப்பதிவுக்கான டோக்கன் வைத்திருந்தால் அவர்களை அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அவர்கள் திரும்பி வரும்போது பத்திரவுப்பதிவு செய்ததற்கான ஆவணங்களை காட்டினால், மாவட்டங்களுக்கிடையே பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.