Thursday, December 4, 2025

உடற்பயிற்சி ஆர்வத்தை தூண்டும் தொடர் ஓட்ட நாயகன்

spot_imgspot_imgspot_imgspot_img

இன்றைய நவீன உலகில் காணும் சுழற்சிக்கு ஏற்ப நாமும் அதற்கேற்றவாறு சுழன்று வருகிறோம்,அப்படி இருக்கையில் நம்முடைய உடலுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதென்றால் இல்லை என்ற பதில் தான் நம்மிடம் வருகிறது.இப்படி நாம் உடற்பயிற்சிக்கான முக்கியத்துவத்தை மறந்துவிட்டோம்.

ஆனால் மல்லிப்பட்டிணம் புதுமனைத்தெருவை சார்ந்த அப்துல் பஹத் கடந்த நான்கு ஆண்டுகளாக அதிராம்பட்டினம் ~ ராஜாமடம் என்றும்,மல்லிப்பட்டிணம் ~ அதிராம்பட்டினம் என்று கிழக்கு கடற்கரை சாலை வழியாக தினமும் பத்து கிலோ மீட்டருக்கு மேல் தொடர் ஓட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்த தொடர் ஓட்டத்தை பார்க்க கூடிய பலரும் உடற்பயிற்சி செய்ய கூடிய ஆர்வத்தை தூண்டும் அளவிற்கு அவரின் தொடர் ஓட்டம் இருந்து வருகிறது.தினமும் இடைவிடாத தொடர் ஓட்டம் குறித்து நம்முடைய அதிரை எக்ஸ்பிரஸ்க்கு அப்துல் பகத் தெரிவிக்கையில், நான் கடந்த நான்கு ஆண்டுகளாக அதிரை டு ராஜாமடம் வரை ஓடிக்கொண்டிருக்கிறேன், உடலை கட்டுக்கோப்பாகவும்,ஆரோக்கியமாகவும்,புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள வேண்டும், மேலும் மராத்தான் போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதும் நீண்ட நாள் கனவு என்று ஓடிக்கொண்டே நம்மிடம் தெரிவித்தார்.தொடர் ஓட்ட போட்டிகளில் பல்வேறு வெற்றிகளையும்,சாதனைகளையும் அரங்கேற்ற அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து நாம் நகர்ந்து கொண்டோம்.

இவர் SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரத்தலைவராகவும் செயலாற்றி வருகிறார்,அதன் மூலம் பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஜூலை 11,12,13-2025 ஆகிய தினகளில் இரவு நேர  கால்பந்தாட்ட போட்டி வெஸ்டர்ன் கால்பந்து கழக சார்பாக நடைபெற உள்ளது. இதில்...

அதிரையில் நடைபெற்ற கால்பந்து தொடரில் 2ம் பரிசை தட்டிச்சென்ற WFC ஜூனியர்...

அதிரை பிலால் நகர் BBFC நடத்திய மூன்றாம் ஆண்டு மாபெரும் மூவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 4,5-07-2025 ஆகிய தினங்களில் பிலால்...
spot_imgspot_imgspot_imgspot_img