Home » அதிராம்பட்டினத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்…!

அதிராம்பட்டினத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்…!

by admin
0 comment

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நல சங்கத்தின் சார்பாக  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரத்தலைவர் B. நமது அஷ்ரப்   தலைமை தாங்கினார், தஞ்சை மாவட்ட தலைவர் பஹாத் முஹம்மது முன்னிலை வகித்தார்.

மத்திய மாநில அரசுகள் கொரோனா நிவாரண நிதி மாற்றுத்திறனாளிகளுக்கு 5,000 ரூபாய் தர வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் 200 நாட்களாக உயர்த்தி மற்றும் 4 மணி நேரமே வேலை பார்க்க வைத்து முழு ஊதியத்தையும் 256 ரூபாய்கொடுத்தாக வேண்டும்.,தமிழ்நாடு அரசு அறிவித்த கொரோனா நிவாரண நிதி ஆயிரம் ரூபாய் மாற்றுத்திறனாளிக்கு கொடுத்ததில் குளறுபடி,முகவரி குளறுபடி அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நிவாரண நிதி ஒழுங்கு முறையாக வரவில்லை. ஆதலால் மாற்றுத்திறனாளிகள் பட்டியலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உடனடியாக சரி பார்த்து அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் நகரச் செயலாளர் A M F ஜாபாஃர் சாதிக், நகர பொருளாளர் N ஜாமால் முகமது மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.

You Might Be Interested In

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter