லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் சக்தி வாய்ந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது
இந்த வெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 10க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. லெபனானின் தலைநகர் பெய்ரூட்டின் துறைமுகப் பகுதியில் உள்ள கிடங்குகளில் நெருப்புடன் புகை வந்து கொண்டே இருந்தது.
இந்நிலையில் திடீரென பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறியது. சில மைல் தூரத்திற்கு பூமியே குழுங்கியது. இந்த சக்தி வாய்ந்த வெடிப்பு எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் தெரியவரவில்லை. பல்வேறு ஊடங்களில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது என செய்தி வெளியாகியுள்ளது. சில செய்தி ஊடங்களில் வெடிமருந்து சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீயால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சக்திவாய்ந்த வெடிப்பில் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாக லெபனானின் சுகாதார அமைச்சர் ஹமாத் ஹசன் தெரிவித்தார். துறைமுகப் பகுதியைச் சுற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் போராடி வருகின்றன.
பயங்கர வெடிப்பு நடந்த இடத்தின் அருகே உடைந்து போய்கிடந்த ஓரியண்ட் குயின் என்ற இத்தாலிய கப்பலின் கேப்டன், இதில் இருந்த பலர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றார்..அவரது கப்பல் முழுவதும் எரிந்து கிடந்தது. ரத்த வெள்ளத்தில் சிதறி கிடந்தது. 10க்கும்மேற் பட்டோர் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.