தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள எட்டிவயல் ஏரியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக பட்டுக்கோட்டை தேரடிதெருவைச் சேர்ந்த பார்த்திபன் மகன் வீரக்குமார் (வயது 27) என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து 4 நபர்களை பிடித்து பட்டுக்கோட்டை தனிப்படை போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.