205
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் அமைந்துள்ள சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இந்திய தேசிய கொடியினை ஊராட்சி மன்றத்தலைவர் ஜலீலா ஜின்னா ஏற்றினார்.கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் முன்கள பணியாளர்களை சிறப்பிக்கும் வண்ணம் அவர்களுக்கு நன்றியினை தெரிவத்தார்.
மேலும் இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாசிலாமணி,வார்டு உறுப்பினர் நூருல் ஹமீத்,ஊராட்சி செயலாளர் தெட்சிணா மூர்த்தி மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.