தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஆகஸ்ட் 15 இன்று தமிழகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் ரத்த தான முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது இதில் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக மதுக்கூர் கிளையில் இரத்ததான முகாம் நடைபெற்றது இதில் 60 யூனிட் ரத்தம் தஞ்சை மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்பட்டது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுக்கூர் கிளை மற்றும் தஞ்சை மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய இரத்ததான முகாமிற்கு மாவட்ட தலைவர் கே ராஜிக் முகமது தலைமை வகித்தார் மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார் இதில் கிளை நிர்வாகிகள் தலைவர் அபுபக்கர் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் துணைத் தலைவர் ஆசிப் துணை செயலாளர் ஆசிக் அன்சர் (MISC) மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொள்ள மதுக்கூர் கிளை மாணவரணி மற்றும் மருத்தவரணி இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் இதில் மாவட்ட துணைச்செயலாளர் பாவா மாவட்ட மாணவரணி இத்ரீஸ் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு TNTJ சார்பில் இரத்த தானம் முகாம்!
52