Home » SIM Card-களை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யும் Amazon!

SIM Card-களை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யும் Amazon!

by
0 comment

சிம்கார்டுகளை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யும் புதிய சேவையை ஆன்லைன் வர்த்தக நிறுவனமான Amazon இந்தியாவில் தொடங்கியுள்ளது.
Airtel, Vodafone ஆகிய இரு நிறுவனங்களின் சிம் கார்டுகளை Amazon-ல் ஆர்டர் செய்து பெற முடியும். தங்களது இணையதளம் வழி வாங்கும் சிம் கார்டுகளை வீட்டிற்கு நேரடியாக கொண்டுவந்து வழக்கும் சேவையை Amazon வழங்குகிறது.
டெலிவரிக்கான தொகையாக எதையும் Amazon நிறுவனம் வசூலிக்காதபோதும், சிம் கார்டுகளுக்கு பாதுகாப்பு வைப்புத் தொகையாக Airtel நிறுவனம் ரூ.200-ம், Vodafone நிறுவனம் ரூ.15-ம் பெற உத்தேசித்துள்ளன.
இரு செல்போன் நிறுவனங்களும் சிறப்பு சலுகைகளுடன் PostPaid சிம் கார்டுகளை Amazon வழியாக விற்பனை செய்ய முடிவு செய்துள்ளன. ரூ.499, ரூ.799, ரூ.1,199 மற்றும் ரூ.1,599 ஆகிய தொகைகளில் ஏர்டெல் Post Paid இணைப்புகள் உள்ளன. ரூ.499, ரூ.699, ரூ.999, ரூ.1,699 மற்றும் ரூ.1,999 தொகைகளில் வோடாபோன் Post Paid இணைப்புகள் உள்ளன.
Amazon இணையம் வழி Airtel மற்றும் Vodafone சிம்கார்டுகளை வாங்குவதற்கு,
Amazon.in > SIM operator-ஐ தேர்வு செய்யவும் > வேண்டிய plan-ஐ தேர்வு செய்யவும் > Online-ல் வாங்கவும்.
ஆன்லைனில் புக் செய்த 24 மணி நேரத்தில் செல்போன் நிறுவன Executive நேரில் வந்து ஆவணங்களை பெற்றுக் கொண்டு சிம் கார்டினை வழங்குவார். 2 நாட்கள் நடைபெறும் ஆவண சரிபார்ப்புகளுக்கு பிறகு சிம் கார்டினை பயன்படுத்த முடியும்.
Amazon நிறுவனம் சில சர்வதேச சிம்களையும் தனது இணையத்தின் மூலம் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த இணைப்புகளை அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, போர்ச்சுகல், ஹாங்காங், ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் பெல்ஜியமில் பெறலாம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter