அதிரை பிலால் நகரில் தரமற்ற தார் சாலை போடப்பட்டு வருவதால் அதிரை நகர தமுமுகவுடன் சேர்ந்து பிலால் நகர் பகுதி மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் பரவியது.
இதனையடுத்து அரசு அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பழனிவேல், ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் s. சக்தி மற்றும் 1 வார்டு உறுப்பினர் ஜாஸ்மின் கமால், தமுமுக மாநில துணைச் செயலாளர் S அஹமது ஹாஜா ஆகியோர் சம்பந்தப்பட்ட பிலால் நகர் பகுதிக்கு வருகை தந்து அரசு அதிகாரிகளிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சு வார்த்தையின் முடிவில், 1 அடுக்கு தார் சாலை அமைக்க இருந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று 2 அடுக்கு தார் சாலை அமைத்து தருவதாகவும், மேலும் பிலால் நகர் மக்களின் 10 வருட கோரிக்கையான வடிகால் ரூபாய் 17,30,000 மதிப்பீட்டில் அமைத்து தருவதாகவும் அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.






