வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
வரும் 25-ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் மாமல்லபுரம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வரை எட்டக்கூடும் என்றும் காற்றழுத்த தாழ்வு மையம் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.
இதன் தாக்கம் டெல்டா பகுதிகளான பட்டுக்கோட்டை அதிராம்பட்டிணம் கடற்கரை பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்டுகிறது. இதனை எதிர்கொள்ள அதிராம்பட்டினத்தில் பேரிடர் மீட்பு குழு உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். இக்குழுவினர் அரசு வழிகாட்டுதலின் பிரகாரம் செயல்பட்டு மிட்பு குழுவில் ஈடுபடுவார்கள் என்றும் இதற்கான பிரத்தியேக செல் போன் நம்பர் இன்றுமாலை வெளியிடப்பட உள்ளதாக அக்குழுவின் ஒருங்கினைபாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனை காரணம் காட்டி விறபனையாளர்கள் பொருட்களை அதிக விலைக்கு விற்பது தெரியவந்தால் உரிய இலாக்கா உதவியுடன் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.