புயலை எதிர்கொள்ள தயாரகும் அதிரை விவசாயிகள் !
கஜா கற்றுகொடுத்த பாடம் கொஞ்சமா நஞ்சமா? இதன்தாக்கத்தை நன்கறிந்த அதிரை விவாசாயிகள் னிவர் புயலின் தாக்கத்தில் இருந்து தென்னைகளை காத்துகொள்ள மரத்தின் பாரங்களை குறைத்து வருகிறார்கள். இதனால் மரத்தின் அடர்த்தி குறைந்து காற்றை எதிர்கொண்டு மரம் தப்பி விடும் என்று தென்னை வள்ளுனர்கள் கூறியுள்ளதை அடுத்து இவ்வாறன நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதேபோல் வீடுகளில் வளர்க்கப்படும் தேக்கு கொய்யா போன்ற மாரக்கிளைகளூம் அகற்றப்பட்டு வருகின்றனர். மொட்டை மாடிகளில் நிறுவப்பட்டுள்ள கூறைகளை அகற்றும் பணிகளில் சிலர் ஈடுபடுகிறார்கள்.
கூறை விடுகளில் இருக்கும் மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு தங்களின் இருப்பிடங்களை தற்காலிகமாக மாற்றி வருகிறார்கள்.
மண்சுவர், போன்ற பலகீனமான சுவர் உள்ள வீடுகளில் தங்கியுள்ளவர்கள் பாதுப்பான இடங்களுக்கு இருப்பிடங்களை தற்காலிமாக மாற்றி கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.