தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி பாலு கடற்கரை பகுதிகளில் இருக்கும் மீனவ குடியிருப்புகள்,புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து குறைகள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாக உறுதியளித்தார்.
இந்த ஆய்வில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம்,தெற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மீனவரனி மாநில துணை செயலாளர் ஜெயபிரகாஷ்,பேராவூரணி ஒன்றிய பொறுப்பாளர் அன்பழகன்,பெருமகளூர் பேரூர் பொறுப்பாளர் ஜெயசந்திரன்,கலை இலக்கிய செயலாளர் பழஞ்சூர் செல்வம்,பொதுக்குழு உறுப்பினர் தனபால்,முன்னாள் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அபுதாகீர்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஹபீப் முகமது,கிளை தலைவர் அப்துல் அஜீஸ்,கிளைத்தலைவர் ரெங்கசாமி,கிளை செயலாளர் முனீஸ்வரன்,அப்துல் மஜீத்,ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் சர்புதீன்,மற்றும் திமுக இளைஞரணியினர் உடனிருந்தனர்.