வெகுஜன மக்களை ஈர்க்கும் EVM எதிர்ப்பு போராட்ட குழுவினர்!
இந்தியத் தேர்தல்களில் ஈவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் 2009ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அன்று முதல் கட்சிக்காரர்களும் அரசியல் விமர்சகர்களும் இந்த இயந்திரத்தின் மேல் தொடர்ச்சியாக குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.
இதில் சூழ்ச்சிகள் செய்து வென்றிடலாம் என பொதுவான குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில், பாஜகவின் தொடர் வெற்றிகள் அதனை ஊர்ஜிதப்படுத்துகின்றது.
தமிழகம் உட்பட பல மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்திய அரசும், தேர்தல் ஆணையமும் ஈவிஎம் பற்றி மக்களுக்கு முழுமையான உண்மைகளைச் சொல்லி சந்தேகங்களைத் தீர்க்க வேண்டும்.
இல்லையெனில் மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பாக இருக்காது… மாறாக, பாஜக நினைப்பதே தேர்தல் முடிவாக வெளியாகும். என ஜந நாயகத்தின் மீது பற்றுள்ள பொதுமக்கள் அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார்.
இதனை கருத்தில்கொண்டு வருகிற 11 ஆம்தேதி மாலை 4:30 மணிக்கு அதிராம்பட்டிணம் பேரூந்து நிலையத்தில் மாபெரும் மக்கள் திரள் கண்டன முழக்கம் நடைபெற உள்ளது.
இதில் கட்சி பாகுபாடுகளை கடந்து அனைத்து கட்சியை சேர்ந்த புரவலர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர். அதற்க்காக அனைத்து,கட்சி இயக்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து அதரவு கோரி வருகிறார்கள்.