Home » 15 நாட்களில் அடுத்த அதிர்ச்சி.. சமையல் கேஸ் சிலிண்டரின் விலை மேலும் ரூ.50 உயர்வு !

15 நாட்களில் அடுத்த அதிர்ச்சி.. சமையல் கேஸ் சிலிண்டரின் விலை மேலும் ரூ.50 உயர்வு !

0 comment

நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில் வருஷத்துக்கு 12 கேஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது… அதற்கு மேல் கூடுதலாக சிலிண்டர் வேண்டுமென்றால், மானியமில்லாமல் சந்தை விலைக்குதான் வாங்க வேண்டும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை, ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் எல்பிஜி விலை, அந்நிய முதலீடு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மானியத் தொகை மாறுபடுகிறது.

இந்தியாவில் மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை எண்ணெய் நிறுவனங்களால் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது… அந்தவகையில், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களாக மாற்றம் செய்யப்படாமல் இருந்த சிலிண்டரின் விலை இந்த தொடக்கத்தில் ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.660 ஆக அதிகரித்தது.

இந்நிலையில், இன்றும் 2வது முறையாக சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்ந்து தற்போது ரூ.710 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஒரே மாதத்தில் மட்டும் சிலிண்டர் விலை ரூ.100 உயர்த்தப்பட்டு உள்ளது.

வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் இந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, 15 நாட்களில் ஒரேடியாக ரூ.100 உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. முன்பதிவு செய்யும் போது பழைய விலையாக இருந்தாலும் புதிய விலைக்கே சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.37 உயர்ந்து ரூ.1,330-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter