தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமா வின் செயற்குழு கூட்டம் 25.11.2017 சனிகிழமை காலை 9.30 மணிஅளவில் தஞ்சாவூர் ஆற்றாங்கரை ஜுமுஆ பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.
தஞ்சை மாவட்ட தலைவர் மெளனானா மெளலவி ஜஃபர்சாதிக் நூரி தலைமையில் நடைபெற்றது.
மெளலானா மெளலவி சாகுல் ஹமீது பைஜி கிராஅத் ஓதினார்கள்,தஞ்சை மாவட்ட செயலாளர் மெளலவி ஹாஜி S. அய்யூப்கான் மன்பஈ சென்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வரவு செலவுகளை வாசித்தார்கள்
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
1.இன்ஷா அல்லாஹ் வரும் 16.01.2018 அன்று மாவட்ட நிர்வாக தேர்தலை பாபநாசம் வட்டாரத்தில் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது
2.ஒவ்வோரு வட்டாரத்தின் தலைவர் செயலாளர்கள் தமது வட்டாரத்தில் உள்ள உலமாக்களின் மொத்த முகவரி பட்டியலை மாவட்ட செயலாளருக்கு அனுப்பிவைக வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது
3.லால்பேட்டை பேராசிரியர் ஜாஹிர் உசேன் மிஸ்பாஹியின் மருத்துவ செலவிற்கு உலமாக்கள் தாராளமாக நீதி வழங்கிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது
4.சபை கூட்டத்தை நடத்த சிறப்பான ஏற்பாடு செய்த தஞ்சை வட்டார ஜமாஅத்துல் உலமாவிற்கு நன்றி தெரித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது
மேலும் டவுன் காஜி காதர் ஹுஸைன் ஹஜ்ரத் துஆ வுடன் கூட்டம் முடிந்தது.
இப்படிக்கு.
மெளலவி ஹாஜி
S. அய்யூப்கான் மன்பஈ,செயலாளர்
தஞ்சை மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை
செல் 9443386439