இன்று காலை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு கூட்டம் தலைவர் எஸ்.எம். பாக்கர் தலைமையில் சென்னை மண்ணடி மாநில தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வரும் தேர்தலில் யாரை ஆதரிப்பது என மாவட்ட நிர்வாகிகள் இடத்தில் கருத்து கேட்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த தலைவர் எஸ்.எம். பாக்கர் கூறியதாவது :
தமிழகத்தில் பாசிசத்தை எதிர்த்து வீழ்த்த, தமிழக மக்களின் நலன் கருதியும், சமூதாய நலனை முன் நிறுத்தியும், மோடி அரசு மக்களை வஞ்சித்து வருகிறது அதற்கு எதிராக ஓட்டுகள் சிதற கூடாது என செயற் குழு உறுப்பினர்கள் ஒட்டு மொத்த முடிவு அடிப்படையில், இந்த சட்டமன்ற தேர்தலில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வரலாற்றில் முதல் முறையாக திமுக தலைமையில் உள்ள கூட்டணியை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து தரப்பு மக்கள் வாக்குகளும் திமுக கூட்டணிக்கு திரட்டுவது தான் பாசிசத்தை வீழ்த்துவதாகும்.
மேலும் முஸ்லிம்கள் வாக்கு சிதறாமல் இருக்க திமுக, எஸ்டிபிஐ மற்றும் மஜகவை அழைத்து பேச வேண்டும் என பேட்டி அளித்தார்.
மேலும் EVM மிஷின் விசயத்தில் திமுக தேர்தலில் மிக கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். உடன் மாநில மாவட்ட நிர்வாகிகள் இருந்தனர்.



