Home » அதிமுக கூட்டணியில் பட்டுக்கோட்டை உள்ளிட்ட 6 தொகுதிகள் தமாகா-விற்கு ஒதுக்கீடு !

அதிமுக கூட்டணியில் பட்டுக்கோட்டை உள்ளிட்ட 6 தொகுதிகள் தமாகா-விற்கு ஒதுக்கீடு !

0 comment

அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவடைந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன. ஆனால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, தங்களுக்கு 12 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததால் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை உள்ளதாக கூறப்பட்டது.
சைக்கிள் சின்னத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றால் 12 தொகுதிகள் அல்லது குறைந்தபட்சம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் ஜிகே வாசன்.

ஆனால், தேமுதிக, அதிமுக கூட்டணியில் இருக்குமா இல்லையா என்ற ஒரு இழுபறி நிலை இருந்ததால் தமிழ் மாநில காங்கிரசுக்கு அத்தனை தொகுதிகள் ஒதுக்க அதிமுக யோசித்து வந்தது.

இப்போது தேமுதிக இந்த கூட்டணியில் இல்லை. இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கிள்ளியூர், பட்டுக்கோட்டை, லால்குடி, திரு.வி.க. நகர், தூத்துக்குடி, ஈரோடு உள்ளிட்ட தொகுதிகளில் தமாகா போட்டியிடுகிறது. மேலும் தமாகா இந்த தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter