வரும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் – சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அதில் எஸ்டிபிஐ கட்சி மதுரை மத்தியம், பாளையங்கோட்டை, ஆம்பூர் உள்ளிட்ட6 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து களமாடும் இக்கட்சிகள் பரஸ்பரம் தங்களின் அலுவலகங்களுக்கு விஜயம் செய்து வருகின்றனர்.
அதன்படி இன்று இரவு அதிரை அமமுக அலுவலகம் சென்ற அதிரை SDPI கட்சியின் நிர்வாகிகளை அமமுக நகர கிளை நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். அப்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அமமுக-
எஸ்டிபிஐ கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.