Wednesday, October 16, 2024

பெட்ரோல், டீசலை GST வரிக்குள் கொண்டுவர வாய்ப்பே இல்லையா?” : நிதி அமைச்சரின் பதிலால் மக்கள் கலக்கம்!

spot_imgspot_imgspot_imgspot_img

மோடி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதலே மக்களை தெளிய விட்டு தெளிய விட்டு அடித்து வருகிறது. குறிப்பாக, பெட்ரோல், டீசல் போன்றவைகளின் விலையோடு, அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளதால் மக்கள் பரிதவித்து நிற்கின்றனர்.

‘சர்வதேச சந்தையில் உள்ள விலை நிலவரங்களின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயித்துக் கொள்கின்றன. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக பெட்ரோல், டீசல் மீதான விலை தினந்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

அதற்கு மத்திய அரசு விதித்துள்ள கலால் வரியே காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. அதேவேளையில், பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவரவேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டுவரப்படுமா என்று மக்களவையில் நேற்று எதிர்கட்சி எம்.பிக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்தக் கேள்விக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “இப்போதுள்ள நிலையில் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், இயற்கை எரிவாயு, சமையல் சிலிண்டர் ஆகியவற்றை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டுவரும் திட்டம் ஏதும் இல்லை.

இந்த பொருட்களை எந்த தேதியில் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது என்று மாநிலங்களும் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் சிபாரிசு செய்ய வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இதுவரை, ஜி.எஸ்.டி. கவுன்சில் அப்படி ஒரு சிபாரிசை செய்யவில்லை.

மேலும், இப்போதுவரை ஜி.எஸ்.டி கவுன்சில், பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டுவரும் தேதி குறித்து ஏதும் பரிந்துரை செய்யவில்லை. மேலும் வருவாயில் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் ஆராய்ந்து, ஜி.எஸ்.டி கவுன்சில் இதுகுறித்து ஒரு முடிவு எடுக்கலாம். அப்படி கொண்டு வந்தால், நாடு முழுவதும் எரிபொருட்கள் மீது ஒரே மாதிரியான வரி விதிப்பு சாத்தியமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமிழ்நாட்டில் காலாண்டு தேர்வு விடுமுறையை நீட்டித்து பள்ளி கல்வித்துறை உத்தரவு..!

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிவடைந்து விடுமுறை அக்டோபர் 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்பொழுது பள்ளிக்கல்வித்துறை காலாண்டு தேர்வின்...

தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக நவாஸ்கனி எம்பி தேர்வு!

தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்....

வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பதற்கு இன்றே கடைசி நாள்!

மத்திய அரசு தற்போது நடைமுறையில் இருக்கும் வக்ஃப் சட்டத்தை மாற்றி, அதிலே பல்வேறு திருத்தங்களை செய்து புதிய வக்ஃப் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல்...
spot_imgspot_imgspot_imgspot_img