177
உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் , இன்ஸ்டாகிராம் செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் திடீரென உலகம் முழுவதும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் இன்று இரவு சுமார் அரை மணிநேரத்திற்கும் மேலாக முடங்கியது.
இதனால் அதன் பயனாளர்கள் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியாமல் மிகுந்த சிரமமடைந்தனர். வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் முடக்கத்திற்கு தொழில்நுட்ப கோளாறு காரணம் என கூறப்படுகிறது. அரைமணி நேரம் முடங்கி இருந்த வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியது.