அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் உறுப்பினர் புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான காலவரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் உறுப்பினர் புதுப்பித்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை செப்டம்பர் 16 முதல் நவம்பர் 15ம் தேதிவரை நடைபெற்றது.இந்நிலையில் தமிழிகத்தில் கனமழையின் காரணமாக உறுப்பினர் சேர்க்கைக்கான காலவரம்பு நீட்டிக்கப்பட்டு 30.11.2017 அன்று முடிவடைகிறது என்று பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்திருந்தார்.
ஆர்கேநகர் தேர்தல் வரவிருப்பதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு உறுப்பினர் சேரத்தல் மற்றும் புதுப்பித்தல் 30.12.2017 அன்றுவரை காலவரம்பு நீட்டிக்கப்பட்டு அதுவே இறுதிநாளகவும் அறிவித்துள்ளார்.