தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிராம்பட்டினத்தில் திமுக கூட்டணி கட்சியினர் திமுக வேட்பாளர் கா. அண்ணாத்துரைக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று பிற்பகல் அதிராம்பட்டினம் பெரிய கடைத்தெருவில் உள்ள வணிகர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனர். இதில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.








