Home » பாபநாசம் : மமக பிரச்சார வாகனம் மோதி 3 சிறுவர்கள் படுகாயம்!

பாபநாசம் : மமக பிரச்சார வாகனம் மோதி 3 சிறுவர்கள் படுகாயம்!

0 comment

காயமடைந்த சிறார்களை பார்க்க வராத மமகவினர் மீது கிராமமக்கள் அதிருப்தி!

பாபநாசம் அருகே திமுக கூட்டணி கட்சியான மனித நேய மக்கள் கட்சியின் தேர்தல் பிரச்சார வாகனம் மோதி கடந்த இர!ண்டு நாடுகளுக்கு முன்னர் 3 சிறார்கள் படுகாயமடைந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அரையபுரம் கேட்டுத்தெரு பகுதியில் திமுக கூட்டணி கட்சியான மனிதநேயமக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லாவுக்காக ஒரு சரக்கு வாகனம் மூலம் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்தனர் அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் மீது பிரச்சார வாகனம் பலமாக மோதியது இதில் ரமேஷ், என்பவரது மகன்கள் வெற்றி(10) ராகேஷ்(9) யோகேஷ்(7) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

அகரல் சப்தம் கேட்ட அப்பகுதி மக்கள் காயமடைந்த சிறுவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் சிறுவன் யோகேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து தகவல் அறிந்தும், திமுக கூட்டணி வேட்பாளரோ,அல்லது அந்த கட்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர்களோ இதுவரை சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களை பார்க்கவோ ஆறுதல் சொல்லவோ வரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் குடும்பத்தினர் மற்றும் கிராமமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter