Home » அதிகரிக்கும் கொரோனா – கர்நாடகாவில் கடும் கட்டுப்பாடுகள் அமல்!

அதிகரிக்கும் கொரோனா – கர்நாடகாவில் கடும் கட்டுப்பாடுகள் அமல்!

0 comment

கர்நாடகாவில் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளுடன் புதிய வழிகாட்டு விதிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது,

அதன் விவரத்தை இப்போது பார்ப்போம் :

◆6 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது

◆10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் இயங்கும், ஆனால் மாணவகள் காட்டாயம் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை.
விருப்பம் இருந்தால் வரலாம்.

◆கல்லூரி மாணவர்களும் வகுப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. தேர்வுகள் மட்டும் நடைபெறும்.

◆உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், பார்டி ஹால்கள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது.

◆பொதுக்கூட்டம், பேரணி மற்றும் போராட்டம் நடத்த உடனடியாக தடை விதிக்கப்படுகிறது.

◆சினிமா தியேட்டர்கள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க வேண்டும்.

பெங்களூரு ஊரகம், பெங்களூரு நகரம், கல்புர்கி, தக்ஷிண் கன்னடா, உடுப்பி, பிடார், தர்வாத் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டுமே சினிமா தியேட்டர்கள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும் கட்டாயம் முகவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். சானிடைசர்களில் கைகளை கழுவது போன்றவை முறையாக பின்பற்றப்பட வேண்டும்.

வழிபாட்டுத் தலங்களில் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. கோயில் திருவிழாக்கள் மற்றும் மதவழிபாட்டு விழாக்கள் நடத்த அனுமதி இல்லை. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாத பப்கள், பார்கள், கிளப்கள், ரெஸ்டாரெண்டுகள் உடனடியாக மூடப்படும்.

ஷாப்பிங் மால்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்களில் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அரசு அறிவித்துள்ளபடி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். வீட்டிலிருந்தே வேலை செய்வதை நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்” என்று கர்நாடக அரசு கூறியுள்ளது,

இதனிடையே கேரளா, மகாராஷ்டிரா, சண்டீகர் மற்றும் பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் இருந்து பெங்களூர் செல்லுவோர் மட்டும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்து இருப்பது கட்டாயம். மற்றபடி, தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து பெங்களூர் செல்வோர் சான்றிதழை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டியதில்லை என்று கர்நாடக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter