Home » BREAKING : 11 அமைப்புகளுக்கு தடை!

BREAKING : 11 அமைப்புகளுக்கு தடை!

0 comment

இலங்கையில் கோத்தபய ராஜபக்‌ஷே தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்றவுடன் அங்கு சிறுபான்மை சமூகமான இஸ்லாமியர்களுக்கு அதிகளவு நெருக்கடிகளை கொடுத்து வருகிறார்.

இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த ஈஸ்டர் தினத்தில் சக்திவாய்ந்த குண்டு அங்குள்ள தேவாலயம் ஒன்றில் வெடித்தன. இதில் சம்பந்தப்பட்ட ஜஹ்ரான் என்ற நபர் மனித வெடிகுண்டாக இருந்து வெடிக்க செய்தார்.

இதனை கண்டித்து இஸ்லாமிய சமூகம் ஒன்றிணைந்து கடும் கண்டனத்தை பதிவு செய்தது. இக்குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரான ஜஹ்ரான் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பை நடத்தி வந்தவராவார். இச்சம்பவம் குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இச்சம்பவம் கொடூரமான செயல் என்றும், இது இஸ்லாமிய நெறிமுறைக்கு மாற்றமானது என்றும் இதனை செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனைக்கு உரியவர்கள் என அப்போதே கண்டனம் தெரிவித்து தவ்ஹீத் அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றியது.

இந்நிலையில் நேற்று அவசர அவசரமாக இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத், அன்சார் சுன்னதுல் முஹம்மதியா, SLTJ, ACTJ, UTJ, ஜமாத்துல் இஸ்லாமியா மாணவர் அமைப்பு உள்ளிட்ட 11 தவ்ஹீத் அமைப்புகளை தடை செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து ஒட்டுமொத்த தவ்ஹீத் அமைப்பின் பிரதிநிதிகள் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் சட்ட ரீயிலான நடவடிக்கைகள் தொடரும் என்று அங்குள்ள தவ்ஹீத் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.

எமது இலங்கைச் செய்தியாளர் : அபூ சயீத்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter