Home » 18+க்கு கொரோனா தடுப்பூசி இப்போதைக்கு வாய்ப்பில்லை – பல மாநிலங்கள் அறிவிப்பு!

18+க்கு கொரோனா தடுப்பூசி இப்போதைக்கு வாய்ப்பில்லை – பல மாநிலங்கள் அறிவிப்பு!

0 comment

கொரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தமிழகம், மகாராஷ்டிராக, கர்நாடகா, குஜராத், உள்ளிட்ட பல மாநிலங்களில் திட்டமிட்டபடி மே 1ஆம் தேதி 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான மூன்றாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தினசரியும் 4 லட்சம் பேர் பாதித்து வருகின்றனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. முன்களப்பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட்டது.

60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், 45வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டன. 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கடந்த 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் அதற்காக முன்பதிவு செய்யலாம் என அரசு அறிவித்தது. இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்டோர் கோவின் இணைய தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், பஞ்சாப், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கையிருப்பு இருக்கும் தடுப்பூசிகள், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்த மட்டுமே இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், மே 1ஆம் தேதி திட்டமிட்டபடி பல மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திலும் தற்போது 8 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் மட்டுமே கையிருப்பு இருப்பதால், மே 1ஆம் தேதி 18 வயதினருக்கு மேற்பட்டபிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை கோடி தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசிடம் இருந்து வந்த பிறகு தமிழகத்தில் 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

மகாரஷ்டிரா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது கைவசம் 25 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே இருப்பதால், 3ஆம் கட்ட தடுப்பூசி முகாமான 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் மே 1ஆம் தேதி தொடங்கப்படாது எனவும் தெரிவித்துள்ளது. தடுப்பூசி தட்டுப்பாடு முடிந்தபின், படிப்படியாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

18 வயது முதல் 44 வயது வரையிலான பிரிவினருக்கு மே 1ஆம் தேதி தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்க முடியாது என்று மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். தற்போது கையிருப்பில் குறைவான அளவே தடுப்பூசி இருப்பதால், அது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தேவைப்படுகிறது. தடுப்பூசி சப்ளை போதுமான அளவில் இல்லை. மே 3ஆம் தேதிக்குள் தடுப்பூசி கிடைத்துவிடும் என நம்புவதால் மக்கள் பொறுமை காக்க வேண்டும், பதற்றம் அடையவேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

தடுப்பூசி போதுமான அளவில் கிடைத்தபின்பு தான் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறியுள்ளார். மே1ஆம் தேதி தொடங்கப்படாமல் அதற்கு பதிலாக மே 15ஆம் தேதி தொடங்க முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார். தடுப்பூசி சப்ளை போதுமான அளவில் இல்லை, தட்டுப்பாடு இருப்பதால், மே 1-ம் தேதி திட்டமிட்டபடி 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்காது என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

ஆந்திரப்பிரதேசத்திலும், தெலங்கானா மாநிலத்திலும் தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருப்பதால், மே 1ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளன. பீகார், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதால், திட்டமிட்டபடி மே 1ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளன. சீரம் நிறுவனம், பாரத் பயோ டெக் நிறுவனத்திடம் அளிக்கப்பட்ட தடுப்பூசி ஆர்டர்கள் மே 15ஆம் தேதிக்குப் பின்புதான் வரும் எனத் தெரிவித்துள்ளன.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter