அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் கரையூர்தெரு கிராமபஞ்சாயத்து இணைந்து அதிராம்பட்டினம் கரையூர்தெரு மாரியம்மன் கோவில் திடலில் மரம் நடும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் மன்ற தலைவர் வ.விவேகானந்தம் தலைமை வகித்தார் . கிராம பஞ்சாயத்து தலைவர் சி.ரெத்தினம் சுற்றுச்சூழல் மன்ற துணைத் தலைவர் எஸ்.முஹம்மது இப்ராஹிம், துணைச் செயலாளர் மரைக்கா. கே. இத்ரீஸ் அஹமது முன்னிலை வகித்தனர். சுற்றுச்சூழல் மன்ற செயலாளர் எம்.எஃப். முஹம்மது சலீம் வரவேற்புரையாற்றினார்.
பட்டுக்கோட்டை விதை அறைக்கட்டளை தலைவர் சக்திகாந்த் மரம் நடும் பணியைத் துவக்கி வைத்தார்.50 வேம்பு, வாத மரக்கன்றுகள் நடப்பட்டன.
சுற்றுச்சூழல் மன்ற தலைவர் வ. விவேகானந்தம் பேசுகையில் “பசுமையான அதிராம்பட்டினம் பேரூராட்சியை உருவாக்க , முதல்கட்டமாக கரையூர் தெருவில் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கப்பட்டது. தொடர்ந்து அதிரையில் உள்ள வழிபாட்டு தலங்கள், கல்வி கூடங்கள், சாலை ஓரங்கள், மைதானங்கள் ஆகிய இடங்களில் தன்னார்வ அமைப்பு, பொதுமக்கள் உதவியுடன் மரம் நடும் பணியினைச் செய்ய உள்ளோம்.
தனியார் நிலங்களில் மரம் நட ஆலோசனை வழங்கப்படவுள்ளது” என்றார்.
நிகழ்ச்சியில் கரையூர் தெரு பஞ்சாயத்து நிர்வாகிகள் சி.ப.பொன்னம்பலம், என்.ஆறுமுக சாமி, சுற்றுச்சூழல் தொழில்நுட்ப ஆலோசகர் எம.ஏ இத்ரீஸ் மௌலானா, தணிக்கையாளர் என். ஷேக்தம்பி, செயற்குழு உறுப்பினர் எஸ். அஹமது அனஸ் உறுப்பினர்கள் ஜெ.குமார், டி.நவாஸ்கான், அ.கண்ணன், இம்ரான், அஹ்லன் கலிஃபா . அதிரை தூய்மைத்தூதுவர்கள் எம்.கமாலுதீன், அஷ்ரஃப் அலி, யா முஹம்மது சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் மு.சரண்ராஜ் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் மன்ற பொருளாளர் எம். முத்துக்குமரன் மரக்கன்று நடும் பணிகளை ஒருங்கிணைத்தும் மற்றும் நன்றியுரையும் ஆற்றினார்.