Home » 100 டன் ஆக்சிஜனை ரயிலில் கொண்டுவர சீனாவிடம் கண்டைனர்கள் வாங்கும் தமிழக அரசு!

100 டன் ஆக்சிஜனை ரயிலில் கொண்டுவர சீனாவிடம் கண்டைனர்கள் வாங்கும் தமிழக அரசு!

0 comment

ஒடிசாவிலிருந்து தினசரி ஒதுக்கீடான 100 டன் ஆக்சிஜனை ரயில் மூலம் தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கு, சீனாவிடம் இருந்து 12 ISO கண்டைனர்களை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இந்த 12 ISO கண்டைனர்கள் சீனாவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வரும் மே 22ம் தேதி வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் தமிழக அரசிடம் 9 ISO கண்டைனர்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 20 டன் பதிவுள்ளவை. இந்த கண்டெய்னர்கள் மூலம் அரசு ஒடிசாவின் காலிங்காநகரில் இருந்து ஆக்சிஜனை ரயில் வழியாக தமிழகத்திற்கு அரசு கொண்டு வருகிறது. இது தவிர சாலை வழியாக ஒடிசாவின் ரூர்கோலாவில் இருந்து 12 டேங்கர்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டுவரப்படுகிறது. ஒவ்வொரு டேங்கரும் 15 டன் எடை உடையவை ஆகும்.

தற்போதைய நிலையில் தமிழக அரசு ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய ஒடிசாவில் இருந்து ரயில் அல்லது சாலை மூலம் சென்னைக்கு ஆக்சிஜன் கொண்டு வர மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகிறது. இத்தனைக்கு காலி டேங்கர்களை ராஞ்சிக்கு விமானம் மூலம் அரசு அனுப்பி வைக்கிறது.

இந்த சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக உள்ளதால், தமிழக அரசு மேலும் 12 ஐஎஸ்ஓ கண்டெய்னர்களை சீனாவிடம் இருந்து வாங்க முடிவு செய்துள்ளது

தினமும் 100டன் ஆக்ஜிஜன் ஒடிசாவில் இருந்து தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, அவற்றை கொண்டு வர இந்த ஆக்சிஜன் கண்டெய்னர்கள் தேவை என்பதால் மாநில அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது. கண்டெய்னர்கள் விமானத்தில் அனுப்பிவைப்பதற்கான பணிகள் சீனாவில் நடந்து வருகிறது. இவை வரும் மே 22ம் தேதி தமிழகம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You Might Be Interested In

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter